சென்னை: முதுகலை பொறியியல் செமஸ்டர் முடிவுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், முதுகலை பொறியியல் படிப்பிற்கான தேர்வு முடிவுகளை coe1.annuniv.edu, coe2.annauniv.edu ஆகிய இணைய முகவரியில் முடிவுகளை அறியலாம்.
அதில் ஏப்ரல், மே மாதம் நடைபெற்ற எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் மற்றும் பிஎச்.டி படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிகள் மூலமாக இணைய முறையில் வரும் 6ஆம் தேதிக்குள் 300 ரூபாய் செலுத்தி தங்களுடைய விடைத்தாள் நகலை பெற வேண்டும் எனவும்;
விடைத்தாள் நகலை சம்பந்தப்பட்ட பாடங்களின் பேராசிரியர்கள் சரிபார்த்த பிறகு மதிப்பெண் கூடுதலாக வழங்குவதற்கு உகந்தது எனக் கருதினால் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SSC CHSL Exam : ஜனவரி 4ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்!