சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கட்டிடக்கலை பொறியியல் கல்லூரிகளில் பிஆர்க் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மே மாதம் 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் சரிபார்க்கப்பட்டது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 13்ம் தேதி வெளியிடப்பட்டன. பிஆர்க் படிப்பிற்கு விண்ணப்பம் செய்த 2485 மாணவர்களில் தகுதியான 1400 பேருக்கும், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 30 பேருக்கும் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள கட்டிடக்கலைக் கல்லூரிகள் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் 37ல் 1467 இடங்கள் நிரப்பட இருந்தது. சிறப்புப் பிரிவில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் உட்பட 7 பேருக்கும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசு ஒருவருக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இறுதி கட்டத்தை நெருங்கிய மாநிலக் கல்விக் கொள்கை வரைவு!
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 1408 மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.அவர்களில் 951 மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு விருப்பத்தைப் பதிவு செய்தனர். அவர்களில் இறுதியாக 553 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 41 மாணவர்கள் தகுதிப்பெற்றனர். அவர்களில் 30 மாணவர்கள் விரும்பும் கல்லூரியைப் பதிவு செய்தனர். 24 மாணவர்கள் இறுதியாக இடங்களை தேர்வுச் செய்துள்ளனர். இந்நிலையில் பிஆர்க் படிப்பில் மாணவர்கள் சேராமல் 882 இடங்கள் காலியாக உள்ளது.
பிஆர்க் படிப்பில் ஆதிதிராவிடர் அருந்ததியர் பிரிவினருக்கான இடங்களில் சேராமல் காலியாக உள்ள இடத்தில் ஆதிதிராவிடர் வகுப்பினர் சேர்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை(ஆகஸ்ட் 31ம் ) நடைபெறவுள்ளது. நாளையுடன் பிஆர்க் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைகிறது. ஆர்க் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் துவங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சரை சந்தித்த பிரக்ஞானந்தா.. ரூ.30 லட்சம் பரிசு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!