அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்திய மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் அரியர் தேர்வு முடிவுகள் செல்லாது எனக் கூறியதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், அரியர் தேர்வுக்கான சுற்றறிக்கை ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் உறுப்பு கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ளது.
அதில், "அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற டிசம்பர் 10ஆம் தேதிக்குள் அரியர் தேர்வுகளை எழுத கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோன்று 2012 முதல் 2017ஆம் ஆண்டுவரை கடந்த எட்டு ஆண்டுகளில் இறுதியாண்டு பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நான்கு வளாகங்களில் பயிலும் மாணவர்கள் தங்கள் அரியர் பாடங்களுக்கான கட்டணங்களை வருகின்ற டிசம்பர் 9ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் செலுத்தலாம்" எனக் குறிப்பிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்தத் திடீர் அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோருக்கு டிச.8 வரை காவல்