அண்ணாப் பல்கலைக்கழகத் தேர்வு கால அட்டவணை குறித்து, அப்பல்கலைக்கழக கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிடுள்ள அறிவிப்பின்படி, வரும் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடைபெறும்.
இந்தத் தேர்வு காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும், 12 மணி முதல் 1 மணி வரையிலும், 2 மணி முதல் 3 மணி வரையிலும், 4 மணி முதல் 5 மணி வரையிலும் என நான்கு பிரிவுகளாக நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறும். விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய வகையில் ஒரு மதிப்பெண் வினாக்கள் கொண்டதாக கேள்விகள் இடம்பெறும். சுமாராக 40 கேள்விகள் கேட்கப்படும். அதில், 30 கேள்விகள் அதாவது 80 விழுக்காட்டிற்கு மட்டும் விடைகள் அளித்தால் போதுமானது என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அகமதிப்பீடு தேர்வுக்கு புத்தகங்களைப் பார்த்து எழுதலாம்: அண்ணா பல்கலை., பச்சைக் கொடி!