கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகள் மூடப்பட்டன.
இதைத்தொடர்ந்து சுமார் 8 மாதம் கழித்து, கடந்த 2ஆம் தேதி முதல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகளும், 7ஆம் முதல் கலை மற்றும் அறிவியல், தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டது.
அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்படி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வியில் பிரிவு மைய இயக்குநர் பொறியியல் கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "பொறியியல் படிப்பில் இறுதி ஆண்டு மாணவர்கள் தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை தொடர்ந்து நடைபெறும்.
இறுதி ஆண்டு மாணவர்கள் இந்த மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நேரடியாக கல்லூரிக்கு வருகை தரலாம்.
ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும்போது ஒரு நாளைக்கு ஐந்து பாடவேளை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். மற்ற மூன்று பாடவேளைகள் மாணவர்களின் புறம் மதிப்பீட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"
இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள்?