ETV Bharat / state

அண்ணாநகர் டவர் கிளப்பை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் சார்பாக கட்டிய கட்டடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
author img

By

Published : Oct 15, 2019, 11:53 PM IST

Updated : Oct 16, 2019, 11:16 AM IST

1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கைவிடுத்தது. அதனையேற்ற சென்னை மாநகராட்சி கலையரங்க கட்டடத்துடன் சேர்த்து ஐந்தாயிரத்து 827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் பயன்படுத்திவந்தது.

அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48.85 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் நீதிபதிகள், அலுவலர்கள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறிக் கொண்டு, சட்டவிரோதமாக கிளப் செயல்பட்டுள்ளதாகவும், சில வசதியான நபர்களுக்காக சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்றும் அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறி, டவர் கிளப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Intro:Body:சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31,000 சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் சார்பாக கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப், தங்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கோரிக்கை விடுத்தது. அதை ஏற்று, கலையரங்கக் கட்டிடத்துடன் சேர்த்து 5,827 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் கிளப் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48.85 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ம் ஆண்டில் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளதாகக் கூறிக் கொண்டு, சட்டவிரோதமாக கிளப் செயல்பட்டுள்ளதாகவும், சில வசதியான நபர்களுக்காக சட்டவிரோதமாக கட்டுமானங்கள் கட்டியுள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தார்.

இந்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் எனவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறி, டவர் கிளப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Conclusion:
Last Updated : Oct 16, 2019, 11:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.