மறைந்த தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழ்நாட்டில் திராவிட அரசியலுக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவருமான அறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் அவர் மறைந்து 50 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்றளவும் தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்திய அளவில் பெரும் அரசியல் புரட்சியை வித்திட்டவருமான அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி தலைவர்கள் பலர் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்த பேரறிஞர் அண்ணாவின் வீரமும், சிந்தனைகளும் போற்றுதலுக்குரியவை. வணக்கத்துக்குரிய வழிகாட்டிக்கு வந்தனங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் தேர்தலுக்கான பணிகளில் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டிவரும் நிலையில், தன்னை எம்ஜிஆரின் வாரிசு, தன்னால் அவரது ஆட்சியை தர இயலும் எனக் கூறிவந்த கமல் ஹாசன், தற்போது, அறிஞர் அண்ணா தனது வழிகாட்டி எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.