ETV Bharat / state

#HBDAnna111: அண்ணா என்னும் அறிவுகூர் எழுத்தாளர் - அண்ணாதுரை

அண்ணாவின் வாள் வீச்சுகளாம் சொல்வீச்சுகளைக் கேட்டு சிலாகிப்பவர் பலரும் அவரது எழுத்துகள் குறித்தும் வாசிப்பு குறித்தும் அதிகம் பேசுவது இல்லை. தன் தம்பிகளுக்கு அரசியல் சமூக வகுப்பெடுக்கும் ஆசானாய் அவர் எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 324 . அதில் தமிழில் மட்டுமே 290. அண்ணாவின் எழுத்து யாருக்கானது? எதற்கானது? என்ற பார்வை மிக முக்கியமானது.

anna 111 birthday anniversary
author img

By

Published : Sep 15, 2019, 1:21 PM IST

"இலக்கியம் என்னுடைய பிரச்னையல்ல. வாழ்க்கைதான் என்னுடைய பிரச்னை. வாழ்க்கையில் இன்பத்தை பெருக்க வேண்டும். வேதனையை குறைக்க வேண்டும். இதுதான் என் இறுதி லட்சியம். ஒரு தெளிவான சமூக குறிக்கோளுள்ள எழுத்தாளன் நான். இந்த சமூக உறவுதான் என்னை எழுத வைக்கிறது." - இதுதான் அண்ணா!

அண்ணாவின் எழுத்தின் மீது மட்டுமல்ல திராவிட இயக்க அரசியல் தளத்திலிருக்கும் அனைவரின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு இவர்களின் எழுத்துகள் வெறும் பரப்புரை தொனியில் இருக்கிறது. அதில் இலக்கியத்தொனி இல்லை என்பதே!

இதனை ஒரு எளிய உதாரணம் கொண்டு அணுகலாம். சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் பராசக்தி திரைப்படம் திரையிடப்படாமல் தடைசெய்யப்பட்டது. கருணாநிதியின் எழுத்துகள் அன்று ஏற்படுத்திய தாக்கம் இன்றுவரை நீடிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவை இல்லை. இந்தத் திரைப்படம் ஒரு பரப்புரை பாணியில் அமைந்ததுதான். அன்றைய காலக்கட்டத்தில் அதுதான் தேவைப்பட்டது. மூடநம்பிக்கையிலிருந்த மக்களுக்கு எழுத்தின் மூலம் பகுத்தறிவை கற்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இதை அப்படியே அண்ணாவின் எழுத்துகளுடன் பொருத்திப் பார்க்கலாம்.

கருப்பண்ணசாமி யோசிக்கிறார் - என்றொரு கதையில் பக்தி என்று மக்கள் மூடநம்பிக்கையில் பிறழ்வதையும் மக்கள் கடவுளின் பெயரால் பிரிந்து சண்டையிடுவதையும் கண்டு கருப்பண்ணசாமியே கலங்குவதாக செல்லும் அந்தக் கதை.

"தேவி! பக்தர்களால் எனக்கு ஏற்பட்ட ஆபத்தும் சங்கடமும் உனக்கென்ன தெரியும்? வரவர இந்த 'வேலையிலே' எனக்கு வெறுப்பு வளர்ந்து கொண்டு வருகிறது. தாவரம் செய்த மோசத்தை அரை பலம் கற்பூரத்திலே மறைத்து விடலாம் என்று எண்ணுகிறான். அதற்கு நான் உடந்தையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். இவனுடைய பேராசைக்கு நான் துணை செய்ய வேண்டும் என எண்ணுகிறான். காரணம் கேட்டால் பெரிய படையலிட்டிருக்கிறேன் என்று கூறுகிறான்." இப்படி மறைமுகமாக அண்ணா மூடநம்பிக்கைக்கு அளித்த சவுக்கடிகள் ஏராளம்.

கொக்கரக்கோ- கதை வாசிக்கும்போது சில பத்திரிகைகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும். பேரன் பெங்களூருவில் - என்றொரு கதை. அதில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புரோகிதர்களையும் பணத்திற்காக அவர்கள் செய்யும் சமரசங்களையும் மிக சாமர்த்தியமாக கூறியிருப்பார்.

"முகூர்த்தம் குறித்துக் கொடுப்பதிலும் சடங்கு சம்பிரதாயத்தை அமைத்துக் கொடுப்பதிலும் வாடிக்கைக்காரரின் விருப்பம்தான் அவருக்கு மேஷம், ரிஷபம், மிதுனம். முதலியார்வாள்! கோர்ட்டுக்கு போகவேண்டாமா! காலையிலே பத்து மணிக்குள் காரியத்தை முடித்து விடுகிறேன். கரிநாள் என்று சொல்லுவா! அது ஒன்றும் செய்யாது. ஏன் தெரியுமா? முதலியாரின் ஜாதகம் அப்படிப்பட்டது"

இப்படி பல கதைகளை உதாரணம் சொல்லலாம். அண்ணாவின் கதைகளில் பெண்களுக்கான முக்கியத்துவம் தனித்துவமாக இருக்கும். வழக்கமான பாணியில் இல்லாமல் அந்தப் பெண் கல்வி கற்று இருப்பார். சுயமரியாதை பேசுவார். தனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்கும் துணிச்சலான பெண்கள் அண்ணாவின் கதைகளில் இடம்பெறுவர்.

அண்ணாவின் கதைகளைப்போலவே நாடகங்களிலும் தான் சொல்லவந்த கருத்துகளை அதன் வழிகொண்டு சேர்த்தார். அதில் சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம் ஒரு மணிமகுடம்.

சூத்திரரான மராட்டிய மன்னன் சிவாஜிக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு முன் அவரை ஷத்திரியராக மாற்றும் முயற்சி சிவாஜியின் சம்மதத்துடன் காகப்பட்டர் மூலம் நடந்துகொண்டிருக்கும். அதில் வரும் மோகன் என்ற கதாபாத்திரம் பேசும் வசனமிது,

"யாருடைய சாஷ்திரம்? எதிரிகளிடம் இந்த நாடு சிக்கியபோது, அந்த சாத்திரம் உதவவில்லையே? யாரும் அதன் துணையை தேடவில்லையே? கங்கைக்கரைக்கா ஓடினோம். களத்திலே என்ன செய்வது, எப்படிப் போரிடுவது என்று கேட்க? மராட்டியரின் தோள் வலிமையும் அவர்கள் ஏந்திய வாளின் கூர்மையும் அப்போது தேவைப்பட்டது. இப்போது மன்னர்களை மண்டியிட வைத்த மாவீரனுக்கு சாத்திரத்தைக் காட்டுகிறார்கள். சாத்திரத்தை.‌‌" தம்மை உயர்ந்தோர் என்று காட்டிக்கொள்பவர்களின் கபடவேடத்தையும் சாதுர்யமான சூழ்ச்சியையும் இந்த நாடகத்தில் தோலுரித்துக் காட்டியிருப்பார்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அண்ணாவின் கொள்கைகளை ஆயுதமாக்கி பயன்படுத்த வேண்டிய நெருக்கடியில் இப்போது நாம் இருக்கிறோம். அந்த வகையில் அவரின் எழுத்துகள் நமக்கொரு ஆவணம். ஏனென்றால் அண்ணா என்பது வெறும் பெயரல்ல. ஒரு சமூக பல்கலைக்கழகம்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.