திமுக தலைவர் ஸ்டாலினின் 67ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கொரட்டூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கூடி 'அசைவம் உண்போம்! குணத்தால் ஒருவர் என்போம்!' என்கிற தலைப்பில் அசைவ விருந்து வழங்கும் விழா நடைபெற்றது.
கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியில் 1067 ஏழை எளிய குடும்பத்தினருக்கு அசைவ உணவை ஏற்பாடு செய்தனர். இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே சேகர் பாபு தலைமையில், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு கலந்துகொண்டு சில்வர் பாத்திரத்தில் அசைவ உணவை வழங்கி தொடங்கிவைத்தார்.
இந்த மாபெரும் அசைவ உணவு விருந்திற்காக 400 கிலோ ஆட்டுக்கறியும் 350 கிலோ பாசுமதி அரிசியும் கொண்டு சமையல் செய்தனர். இதில் சுமார் 35 பேர் சேர்ந்து இந்த உணவை தயாரித்தனர். இந்த உணவு ஏழை எளிய குடும்பங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.