ETV Bharat / state

செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஆந்திரா திருட்டு கும்பல் கைது - cell phone theft

சென்னையில் பீக் ஹவர்ஸ் நேரத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திராவைs சேர்ந்த ஒரு பெண் உள்பட 6 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திரா திருட்டு கும்பல் கைது

author img

By

Published : Sep 25, 2022, 10:46 PM IST

சென்னை: எழும்பூர் பகுதியில் மாநகரப் பேருந்துகளில் செல்போன்கள் அதிகளவில் திருடுபோவதாக காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்து வந்தன. இதனடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் தேடி வந்த நிலையில், எழும்பூர் பேருந்து நிலையம் அருகே ராஜேஷ் என்பவர் பொதுமக்களிடம் செல்போன் திருடும் போது கையும் களவுமாக காவல் துறையினர் பிடித்துள்ளனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திரா மாநிலம் கோதாவாரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் ஆண்கள், பெண்கள் என கும்பலாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, ரயில் மூலமாக சென்ட்ரல் ரயில்நிலையம், எழும்பூர் போன்ற பகுதிகளுக்கு வந்தடையும் இவர்கள் அங்கிருந்து கூட்டமாக உள்ள பேருந்துகளில் ஏறி சென்று ஸ்மார்ட் போன்கள் மற்றும் மணிப்பர்ஸ்கள் போன்ற உடமைகளை திருடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

குறிப்பாக பீக் ஹவர்ஸ் நேரங்களான காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் 6 வரையிலும் திருடுவதை வழக்கமாக வைத்து இருந்துள்ளனர். ரயில் நிலையங்கள் மற்றும் பாண்டிபஜார் போன்ற பகுதிகளில் அதிகளவில் கைவரிசை காட்டியதும் , கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி செய்தித்தாள் படிப்பது போல செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

ராஜேஷ் கொடுத்த தகவலின் பேரில் அம்பத்தூர் மேனாம்பேடு பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு தங்கி இருந்த சந்தோஷ்(26), கனகராஜ்(35), யசோதா(60), மது(18), ராஜி(18) ஆகிய 6 நபர்கள் கைது செய்யப்பட்டு ஏழு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘இந்தியாவில் பல கட்சி இருக்கலாம் ஆனால் பிஜேபிக்கு மாற்று காங்கிரஸ் தான்’ - திருநாவுக்கரசர் எம்பி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.