ETV Bharat / state

ஸ்டாலினைச் சந்தித்த நடிகை ரோஜா! - ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர் ரோஜா தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்தார்

ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை உறுப்பினர் நடிகை ரோஜா சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஆந்திரா சட்டமன்ற உறுப்பினர் ரோஜா தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்தார்..

author img

By

Published : Feb 7, 2022, 2:17 PM IST

சென்னை: ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், பிரபல நடிகையுமான ரோஜா இன்று தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்தார். அப்போது ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்த ரோஜா, “தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள நகரி தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாகத் தமிழ்நாடு எல்லைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் தமிழ் வழி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு 1000 பாடப் புத்தகங்கள் தேவைப்படுகின்றன, பாடப் புத்தகங்களை வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

விஜயபுரம் மண்டலத்தில் ஆந்திர அரசு 5600 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. நெடுமரம் முதல் அரக்கோணம் வரை சாலை அமைக்கத் தமிழ்நாட்டிலிருந்து ஒன்பது ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இது தொடர்பாக முதலமைச்சரிடம் கோரிக்கைவைத்தோம். சம்பந்தப்பட்ட துறையோடு பேசி முடிவு தெரிவிப்பதாகக் கூறினார்.

ஸ்டாலினைச் சந்தித்த ரோஜா

நெசவாளர்கள் நெய்த ஸ்டாலின் உருவம் பொறித்த சால்வை

தென்னிந்திய நெசவாளர் சங்கத் தலைவராக ஆர்.கே. செல்வமணி உள்ளார், தமிழ்நாடு - ஆந்திர எல்லைப் பகுதிகளில் நெசவுத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். தமிழ்நாடும் ஆந்திரப் பகுதியில் உள்ள நெசவாளர்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்தேன்" எனத் தெரிவித்தார். மேலும் நெசவாளர்கள் நெய்த ஸ்டாலின் உருவம் பொறித்த சால்வையைக் காட்டினார்கள்.

இதையும் படிங்க:சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.