ETV Bharat / state

தமிழ்நாட்டில் சிமெண்ட் விலை உயரும் மர்மம் என்ன? - அன்புமணி கேள்வி - இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் விலை உயருவதற்கு பின்னிருக்கும் மர்மம் என்னவென்றும், மாநில அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் எனவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ன்புமணி ராமதாஸ்
ன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Jun 19, 2021, 1:02 PM IST

சென்னை: சிமெண்ட் விலை தொடர்பாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில், தமிழ்நாட்டில் மட்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, கட்டுமான பொருள்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அந்த நிறுவனங்களை மயிலிறகால் வருடிக் கொடுப்பதன் மர்மத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

விலையேற்றம்

தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை கடந்த சில வாரங்களில் மட்டும் 40விழுக்காடு வரை உயர்ந்துள்ளன.

பொருள்விலை விவரம்

ஊரடங்கிற்கு முன்னர்

(ரூ.)

ஊரடங்கிற்கு பின்னர்

(ரூ.)

சிமெண்ட்

(ஒரு மூட்டை)

370 520

ஒன்றரை அங்குல ஜல்லி

(1 யூனிட்)

3,400 3,900

முக்கால் அங்குல ஜல்லி

(1 யூனிட்)

3,600 4,100

எம் - சாண்ட்

(1 யூனிட்)

5,000 6,000

கட்டுமான கம்பி

(1 டன்)

68,000 75, 000

செங்கல்

(1 லோடு)

18,000 24,000

தமிழ்நாட்டில் மட்டும் விலையேற்றம்

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் சிமெண்ட் விலை இந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. தலைநகர் டெல்லியில் ஒரு மூட்டை சிமெண்ட் ரூபாய் 350க்கும், ஆந்திரா ரூபாய் 370க்கும், தெலங்கானா ரூபாய் 360க்கும், கர்நாடகம் ரூபாய் 380க்கும் மட்டுமே விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு மூட்டை சிமெண்ட் 40 விழுக்காடு கூடுதல் விலை வைத்து, ரூபாய் 520க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற கட்டுமான பொருள்களின் விலைகளும் தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் 25 விழுக்காடு வரை குறைவாகவே உள்ளன.

இதையும் படிங்க: வீடு கட்டும் கனவைத் தகர்த்த கட்டுமான பொருள்கள் விலையேற்றம்!

தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது டெல்லி, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன; அந்த மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிக அளவில் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகள் அதிகமாக இருப்பதற்கு காரணம், அவற்றின் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்து செயற்கையாக விலைகளை உயர்த்தியிருப்பதுதான் என்பதில் ஐயமில்லை.

நடவடிக்கை எப்போது?

தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 9ஆம் தேதியே மாநில அரசை நான் கேட்டுக் கொண்டேன். சுமார் 10 நாட்களாகியும் தமிழ்நாட்டில் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகளைக் குறைக்க ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருள்களின் உற்பத்தியாளர்களை இது தொடர்பாக அழைத்துப் பேசியிருப்பதாகவும், விலைகளை குறைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருப்பதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அவர் எச்சரிக்கை விடுத்து பல நாட்களாகியும் இன்று வரை சிமெண்ட் விலை குறைக்கப்படவில்லை.

முதலமைச்சர் தலையீடு?

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகளை குறைக்க வேண்டும் என்று தொழில் துறை அமைச்சர் வலியுறுத்தியிருப்பதிலிருந்தே விலைகள் அநியாயமாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருப்பது உறுதியாகிறது. உயர்த்தப்பட்ட விலைகளை குறைக்க வேண்டும் என்று மாநில அரசே கேட்டுக் கொண்ட பிறகும் விலைகள் குறைக்கப்படாவிட்டால், அவர்கள் அரசை மதிக்கவில்லை என்று தானே பொருள்?

அரசுக்கே சவால் விடும் அத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் என்ன தயக்கம்? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் ஏழைத் தொழிலாளர்களுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகளில் மிகவும் முக்கியமானது கட்டுமான தொழில்.

சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வால் கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் நலன் கருதியும், மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டும் சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலைகளை உடனடியாக குறைக்கும்படி அரசு ஆணையிட வேண்டும்; அதை செய்ய மறுக்கும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பப்ஜி மதனிடம் விடிய விடிய விசாரணை - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.