ETV Bharat / state

'பள்ளிகள், விடுதிகள் கரோனா மையங்களாகத் திகழும் வாய்ப்புள்ளது' அரசை எச்சரிக்கும் அன்புமணி ராமதாஸ்!

author img

By

Published : Nov 4, 2020, 4:34 PM IST

சென்னை: பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளில் நாள் முழுவதும் மாணவர்கள் முகக் கவசம் அணிவது இயலாத ஒன்று. அதுமட்டுமின்றி, அங்கு பொதுக் கழிப்பிடங்கள் உபயோகப்படுத்தப்படுவதால் அவை கரோனா தொற்று மையங்களாக மாறும் வாய்ப்புள்ளது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை எச்சரித்துள்ளார்.

Anbumani Ramadoss warns government for reopening schools and colleges

கரோனா தொற்று பேரிடர் குறையாத இந்த சூழலில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்கக்கூடாது எனக்கூறி, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளுக்குப் பிறகு நவம்பர் 16ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்புகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா அச்சம் முழுமையாக விலகாத சூழலில், பள்ளி, கல்லூரிகளைத் திறக்கும் முடிவு சரியானதாகத் தோன்றவில்லை. கரோனா வைரஸ் பாதிப்பு மாணவர்களையும், ஆசிரியர்களையும் மட்டும் பாதிக்கக்கூடியது அல்ல. அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள அனைவரையும் தாக்கி மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, தனியார் பள்ளிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக, அரசு இம்முடிவை எடுத்ததாக இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் தினசரி கரோனா வைரஸ் பரவல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவெடுப்பதற்கு, இந்த புள்ளி விவரங்கள் பொருத்தமான அளவீடு இல்லை என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, உலக சுகாதார நிறுவனம் முதல் உள்ளூர் மருத்துவ வல்லுநர்கள் வரை பரிந்துரைக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்பது முகக்கவசம் அணிதல், கையுறைகளை அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவை தான்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இவை சாத்தியமில்லை என்பது தான் எதார்த்தம். அதிகபட்சமாக அரை மணி நேரம் முகக்கவசம் அணிந்தாலே பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். ஆனால், வகுப்புகளில் அவ்வப்போது சில நிமிட இடைவெளிகளுடன் 6 முதல் 7 மணி நேரம் வரை முகக்கவசம் அணிவது மிக மிகக் கடினம் ஆகும்.

ஒரு சில நிமிடங்களுக்கு முகக்கவசத்தை கழற்றினால் கூட, அதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விடுதிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள மாணவர்கள் 24 மணி நேரமும் முகக்கவசம் அணிவது சாத்தியமல்ல.

அவர்களில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்தால் கூட விடுதியில் உள்ள அனைவரும், அவர்கள் மூலமாக கல்வி நிறுவனங்களில் உள்ள பெரும்பான்மையினருக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பொதுக் கழிப்பறையைத் தான் மாணவ, மாணவியர் பயன்படுத்த வேண்டியிருக்கும். அவை தான் கரோனா தொற்று மையமாக திகழும். இத்தகைய ஆபத்தான விளையாட்டில் தமிழ்நாடு அரசு ஈடுபடக்கூடாது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் கணிசமானவர்கள் 50 வயதைக் கடந்தவர்கள். அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே பள்ளிகளைத் திறந்து ஆபத்தை விலைக்கு வாங்கக் கூடாது. கல்வி சார்ந்த அக்கறையால் பள்ளிகளைத் திறக்க எண்ணினாலும், அவற்றை விட மாணவர்களின் உயிர் முக்கியம்.

கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை அல்லது கரோனா முழுமையாக கட்டுக்குள் வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பை அரசு கைவிட வேண்டும். அதுவரை ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும். வல்லுனர்கள் குழு பரிந்துரைக்கும், கள எதார்த்தத்திற்கும் ஏற்ற வகையில் பாடங்களின் அளவை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாணவர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.