ETV Bharat / state

ஆளுநர் மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

’அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆளுநர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், ஆளுநரின் தேநீர் விருந்தை அரசும் புறக்கணித்திருக்கக் கூடாது’ என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 24, 2022, 11:17 PM IST

ஆளுநர் மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

சென்னை: சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் மற்றும் பணியாளர் உரிமை நலச்சங்கம், தமிழக ஆசிரியர்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றச்சங்கம் ஆகிய 2 சங்கங்களை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைத்தார் .

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ, "மின் வெட்டு என்பது கடந்த 20 ஆண்டு காலப் பிரச்னை. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றுவோம் எனப் பல ஆண்டுகளாக கூறி வந்திருக்கிறார்கள். ஆனால், அப்படி இதுவரை செய்யவில்லை. நிலுவையில் உள்ள மின் நிலையங்களை குறித்த நேரத்திற்குள் கட்டி முடிக்காத காரணத்தால் தான் தற்போது மின்வெட்டு சிக்கல் இருப்பதாக’ தெரிவித்தார்.

‘நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதும் மின்வெட்டுக்கு காரணமாக இருந்தாலும் அது குறித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தேர்வு காலம் என்பதால் மின்வெட்டு இருக்கக் கூடாது’ எனவும் அன்புமணி வலியுறுத்தினார்.

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமரா: ’காவல் துறை சரியாக இருந்தால் காவல் நிலைய மரணம் என்பது ஏற்படாது. அனைத்து காவல் நிலையங்களிலும் அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும்’ என்ற அவர் சென்னையில் நடைபெற்ற காவல் நிலைய மரணத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அடிப்படை கல்வி கற்பிப்பதில் சிக்கல்: ’கலாசார மாற்றம் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக ஆசிரியர்கள் மீது மாணவர்கள் மரியாதை செலுத்துவது குறைந்து கொண்டு வருவதாகவும்; ஆன்லைன் வகுப்புகள் படிப்பதாகக் கூறி மாணவர்கள் வேறு சில விஷயங்களை பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதால் மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி கற்பிப்பதில் சிக்கல் இருக்கிறது.

மது விலக்கு குறித்து அரசு கொள்கை முடிவு: பள்ளி மாணவர்கள் மத்தியில் மது கலாசாரம் அதிகமாகியுள்ளது. இதில் மாணவிகளும் ஈடுபடுவது மன வேதனை அளிக்கிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்து முதல் கையெழுத்து மது விலக்காக இருக்கும் என ஸ்டாலின் சொன்னார். ஆனால், ஒரு வருடம் ஆகிவிட்டது. தமிழ்நாட்டில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும். மது விலக்கு குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். அடுத்த நான்கு ஆண்டுகளில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என அரசு செயல் திட்டம் கொண்டு வர வேண்டும்’ எனவும் குறிப்பிட்டார்.

’அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஆளுநர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், ஆளுநரின் தேநீர் விருந்தை அரசும் புறக்கணித்திருக்க கூடாது. கால நிலை அவசர நிலையை மத்திய, மாநில அரசுகள் பிரகடனப்படுத்த வேண்டும். வெப்பத்தைக் குறைக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்’ எனவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்துங்கள் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.