ETV Bharat / state

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை! - An interim injunction to the government granting strap to residents of temple lands for more than 5 years

சென்னை: கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை - உயர் நீதிமன்றம்
author img

By

Published : Nov 22, 2019, 11:01 AM IST

Updated : Nov 22, 2019, 11:45 AM IST

அரசுப் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வருவாய்த் துறை சார்பாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது.

சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக்கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ஆட்சேபம் இல்லாத அரசுப் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சேபனைக்குரிய மேற்கூறிய நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் எனவும் அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோயில் நிலங்களைப் பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோயில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத் துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி, அதன் பிறகே முடிவெடுக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோயிலுக்குத் தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டாவாக வழங்குவது குறித்தும், அந்நிலத்துக்கான விலையை கோயிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தும் நலத்திட்டத்திற்கான இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 19ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை, அகற்றாத அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யவும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: உதயமானது 'தென்காசி' புதிய மாவட்டம்!

Intro:Body:

கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகை செய்யும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Conclusion:
Last Updated : Nov 22, 2019, 11:45 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.