சென்னை: மத்திய சிறு, குறு நிறுவனங்களுக்கான அமைச்சர் நிதின் கட்கரி இன்று சென்னை அடையாறில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தல், மத்திய பட்ஜெட் குறித்து இணைய வழிக் கூட்டத்தில் பங்கேற்றல், தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் நெடுஞ்சாலைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக இன்று தமிழ்நாடு வந்தார்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நாக்பூரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு பாஜக தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர், அவர் அடையாறில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்பட்டுச் சென்றார்