ETV Bharat / state

அதிமுகவை மீட்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது- டிடிவி தினகரன் - ammk

அதிமுகவை மீட்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ammk was launched to recover the AIADMK says tTV Dinakaran
அதிமுகவை மீட்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது- டிடிவி தினகரன்
author img

By

Published : Feb 12, 2021, 3:14 PM IST

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தி.நகர் இல்லத்தில் சசிகலாவை சந்தித்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் சசிகலாவுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி ஒரு வாரத்திற்கு சசிகலா ஓய்வில் இருப்பார். சி.வி. சண்முகம் பேசியது அவரின் தரத்தை காட்டுகிறது. சி.வி. சண்முகம் முதலில் நிதானமாக இருக்க வேவண்டும். ஒரு வார காலமாக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். இவர்கள் ஏன் பதறுகிறார்கள்.

முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கும், மக்களுக்கும் அவர்கள் விசுவாசமாக இல்லை. பொதுச்செயலாளரை கட்சியிலிருந்து நீக்க யாருக்கும் அதிகாரமில்லை, பதவி போனால் இவர்கள் எல்லாம் எங்கு போவார்கள் என்று தெரியும், திமுகவை கண்டு அச்சம் கொள்பவர்கள் அமைச்சர்கள்தான். திமுகவை கண்டு நாங்கள் பயப்படவில்லை, எங்களுக்கு மடியிலே கணம் இல்லை.

சசிகலா அரசியலில் ஈடுபட தார்மீக உரிமையுள்ளது. அதிமுகவை மீட்டெடுப்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. தற்போது, அமைச்சர்கள் பேசியதை எல்லாம் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது" என்றார்.

இதையும் படிங்க: அண்ணா வழியில் விமர்சனங்களை எதிர்கொள்கிறாரா தினகரன்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.