ETV Bharat / state

அமமுக வெற்றிவேல் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: அமமுக பொருளாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

AMMK vetrivel admitted in hospital
அமமுக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல்
author img

By

Published : Oct 13, 2020, 10:51 PM IST

அமமுக பொருளாளர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் உடல்நிலை பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிவேலுக்கு செயற்கை சுவாசக் கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த வாரம் வெற்றிவேலுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் உடல்நிலை சற்று தேறினார்.

தற்போது சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், வெற்றிவேல் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரித்தபோது நலமுடன் இருப்பதாக, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கே.கே.நகர் திமுக பிரமுகர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.