தாம்பரம் தொகுதிக்குள்பட்ட கடப்பேரி பகுதி முழுவதும் அமமு௧ வேட்பாளர் ம. கரிகாலன் திறந்த ஜீப்பில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார். முன்னதாக கடப்பேரியில் உள்ள ஸ்ரீ ஓம் மகா சக்தி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து பரப்புரையை தொடங்கினார்.
இந்நிலையில், பரப்புரையின் போது பேசிய வேட்பாளர் கரிகாலன், “ஐந்து ஆண்டு காலம் தாம்பரம் நகர மன்றத் தலைவராக இருக்கும்போது கடப்பேரியில் உள்ள குளங்களை தூர்வாரி அழகுப்படுத்தி அதை சரி செய்தேன்.
அதேபோல், மீனவ மக்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்தேன், உனது சாதனைகளை விளக்கி தேர்தலில் வாக்களிக்குமாறு கேட்கிறேன். குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்தால் இந்தப் பகுதிகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். என்னை மக்கள் எப்போது வேண்டுமானலும் எளிதில் சந்திக்க முடியும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’சாக்கடையை சுத்தம் செய்ய வந்த துப்புரவுப் பணியாளர்கள் நாங்கள்’ - கமல்