நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே பல தொகுதிகளில் நேரடியாக போட்டி நிலவியது.
இதில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றி முதலிடத்தையும், அதற்கு அடுத்தபடியாக அதிக வாக்குகள் பெற்று அதிமுக கூட்டணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்நிலையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு இடையே அதிக அளவில் போட்டி நடைபெற்றது.
இதில் பரிசு பெட்டி சின்னத்துடன் 38 மக்களவைத் தொகுதிகளிலும் சுயேச்சையாக போட்டியிட்ட அமமுக அரகோணம், சிதம்பரம், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட 21 இடங்களில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு என முக்கிய நகரங்கள் உள்ளிட்ட 11 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.