ETV Bharat / state

ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸ் விபத்து: ஓட்டுநர் படுகாயம் - Chennai district news

சென்னை : ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் அவசர ஊர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Ambulance accident
Ambulance accident
author img

By

Published : Apr 27, 2021, 7:16 PM IST

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜோதி முகமது. இவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளி ஒருவரைத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக்கொண்டு, சேலத்தில் இறக்கிவிட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாராபட்டு சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜோதி முகமதுவை பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

தற்போது இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.