ETV Bharat / state

நடிகர் சித்ரா லட்சுமணன் மீது புகார்! - அம்பேத்கர் மக்கள் இயக்கம்

இசையமைப்பாளர் இளையராஜா குறித்து இழிவாக பேசியதாக திரைப்பட இயக்குனர் ரத்னகுமார், நடிகர் சித்ரா லட்சுமணன் மீது மீண்டும் காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு

author img

By

Published : Jul 27, 2021, 6:17 PM IST

சென்னை: அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு முத்து, திரைப்பட இயக்குனர் ரத்னகுமார், நடிகர் சித்ரா லட்சுமணன் மீது தமிழ்நாடு காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளமுருகு, “கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சித்ரா லட்சுமணன், தான் நடத்தும் "சாய் வித் சித்ரா" (Chai with chithra) என்ற யூ டியூப் சேனல் நிகழ்ச்சியில், திரைப்பட கதாசிரியரும் இயக்குநருமான ரத்னகுமாரை வைத்து பேட்டி எடுத்தார். இந்த பேட்டியில் ரத்னகுமார் இசைஞானி இளையராஜாவை அவரது சாதியை மையமாக வைத்து இழிவாக பேசினார். அதை சித்ரா லட்சுமணனும் அனுமதித்துள்ளார்.

அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் இளமுருகு

இது தொடர்பாக மார்ச் மாதம் ரத்னகுமார் மற்றும் சித்ரா லட்சுமணன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மீண்டும் இன்று புகார் அளிக்க வந்துள்ளோம்.

இழிவாக பேசிய வீடியோவை அவர்களே யூடியூப்பில் இருந்து நீக்கிவிட்டனர். ஆதாரங்களை மறைத்தாலும் குற்றம்தான். புதிய டிஜிபி இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

அதேசமயம் புகார் அளிப்பதற்கு முன்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, புகார் அளிக்க வந்தவரிடம் அம்பேத்கர் பற்றியும், அம்பேத்கர் புத்தகம் பற்றியும் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ஜனநாயக துரோகம் செய்கிறார் - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.