நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், அதனைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இதுவரை, தமிழ்நாட்டில் 1,173 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து அப்பல்லோ வந்த மருத்துவர் வானகரம் உயிரிழந்தார். உயிரிழந்த அவரின் உடலை அம்பத்தூரில் உள்ள மின்சார சுடுகாட்டில் எரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மின்சார சுடுகாட்டில் எரிக்க அலுவலர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், உடலை இங்குத் தகனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலுவலர்கள் , காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
இதனைத்தொடர்ந்து அவரின் உடலை தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். விசாரணைக்குப் பின் அவர் உடலை எப்படி அடக்கம் செய்வது என்பது தெரியவரும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடிப்பு - முதலமைச்சர் பழனிசாமி!