ETV Bharat / state

வாக்கிங் ஸ்டிக்காக மாறியிருந்த செங்கோல் - உம்மிடி குடும்பத்தினர் கூறிய கதை.. - செங்கோலின் வரலாறு

நாடாளுமன்றத்தில் வைக்கப்படவுள்ள செங்கோல் 1947 ஆம் ஆண்டு தங்கள் நிறுவனத்தில் திருவாடுத்துறை ஆதீனம் சொன்னபடி செய்துக் கொடுக்கப்பட்டு, அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் இருந்து கண்டுபிடித்து நாடாளுமன்றத்தின் வைக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என உம்மிடி பங்காரு குடும்பத்தின் உறுப்பினர் அமரேந்திரன் உம்மிடி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 26, 2023, 5:18 PM IST

செங்கோல் குறித்து பேசிய அமரேந்திரன் உம்மிடி

சென்னை: இந்தியா விடுதலை பெற்றபோது 1947 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட செல்கோல் குறித்து உம்மிடி பங்காரு செட்டி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் சார்பில் அமரேந்திரன் உம்மிடி கூறும்போது, “உம்மிடி பங்காரு நிறுவனத்தில் திருவாடுத்துறை ஆதினம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எனது தாத்தா, எனது பெரியப்பா எத்திராஜூலு ஆகியோர் செங்கோலை செய்துக் கொடுத்துள்ளனர்.

அதனைத் எடுத்துச்சென்று திருவாடுத்துறை அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கினார். அதன் பின்னர் அது குறித்த எந்தவிதமான தகலும் இல்லை. இந்த நிலையில் அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டுபிடித்தோம். பின்னர் அது குறித்து வீடியோ மூலம் தகவலை தெரிவித்தோம். அந்த தகவல் பிரதமருக்கு சென்று, புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தில் வைக்கப்படவுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

மத்திய அரசின் அழைப்பின்படி எங்களது குடும்பத்தில் 15 நபர்கள் திறப்பு விழாவில் பங்கேற்கவுள்ளோம். உம்மிடி பங்காரு நிறுவனம் சார்பில் 1947 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட செங்கோல் கிட்டதட்ட 5 அடி உயரம் கொண்டது, ஒன்றரை முதல் 2 கிலோ வரை எடை கொண்டது. செங்கோலை 10, 12 நபர்கள் சேர்ந்து கைகளால் செய்து முடித்தனர்.

திருவாவடுதுறை ஆதீனம் சொன்னபடி செங்கோலை செய்து கொடுத்தோம். எனது பெரியப்பா எத்திராஜூலு, தாத்தா ஆகியோர் செங்கோலை செய்யும்போது அதன் வடிவமைப்பை உறுதிச் செய்தனர். மேலும் நந்தி சிலையில் சிறிய மாற்றங்களையும் செய்யச் சொல்லி உள்ளனர்.

லட்சுமி சிலையும் அவர்களின் அறிவுரையின் படியே வடிவமைத்துள்ளனர். இந்த செங்கோலை சௌகார்பேட்டையில் எங்களது நகை தயாரிப்பு கூடத்தில் செய்துள்ளனர். 98 வயதாகும் தனது பெரியப்பாவும் செங்கோல் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் வைக்கப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்” என தெரிவித்தார்.

உம்மிடி பங்காரு குடும்பம் தமிழ்நாட்டின் வேலூர் அருகே உள்ள குடியாத்தத்தை பூர்விகமாகக் கொண்டது. சென்னை சவுகார்பேட்டையில் முதன்முதலாக தங்கநகைப் பட்டறையை தொடங்கிய இவர்களின் குடும்பம், இன்று சென்னையின் பிரபல நகை விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. சென்னை மட்டுமின்றி பெங்களூருவிலும் உம்மிடி குடும்பத்திற்கு சொந்தமான நகைக்கடைகள் உள்ளன.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தமிழ்நாட்டின் 'செங்கோல்' - அமித்ஷா அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.