சென்னை தாம்பரம் அடுத்த காந்தி ரோட்டில் உள்ள சேவா சதன் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமம் விழா நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் என 150க்கும் மேற்பட்டோர் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். இவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர்.
பள்ளிக்கூடம், ‘96’ போன்ற திரைப்படங்களின் பாணியில் தங்களது பள்ளி கால நினைவுகளைப் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர். தாங்கள் படித்த வகுப்பறைக்குச் சென்று சிறு வயதில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தனர். மேலும், பள்ளி பருவத்தில் தாங்கள் சுவைத்த உணவுகளை ருசி பார்த்து மகிழ்ச்சி கொண்டனர். இந்தச் சம்பவம் அனைவரது மனதையும் பரவசமடைய வைத்தது. மேலும், அனைவரும் ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாடினர்.
இதையும் படிங்க: செயற்கை மணலுக்காக விவசாய நிலத்தை அழிக்கும் மணல் மாஃபியாக்கள்