ETV Bharat / state

’17 சி படிவத்தைக் கொண்டு செல்ல அனுமதிங்க...’; அதிமுக கோரிக்கை!

சென்னை : வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 17 சி படிவத்தைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலரிடம் அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

தலைமை தேர்தல் அலுவலரை சந்தித்து 17 சி படிவத்தைக் கொண்டு செல்ல அனுமதிகோரி மனு அளித்த அதிமுகவினர்

author img

By

Published : Apr 30, 2021, 10:42 PM IST

வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் 17 சி படிவத்தைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திருமாறன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் 17 சி படிவத்தைக் கொண்டு செல்ல அனுமதி கேட்டோம். வாக்கு இயந்திரத்தில் பதியப்பட்ட வாக்கினை, வாக்கு எண்ணிக்கையின் போது இந்த படிவத்திலேயெ பதிவு செய்ய முடியும்.

தலைமை தேர்தல் அலுவலரை சந்தித்து 17 சி படிவத்தைக் கொண்டு செல்ல அனுமதிகோரி மனு அளித்த அதிமுகவினர்

மேலும் இந்தப் படிவத்தை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்ல அனுமதிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் விளக்கம் கேட்கும்ம்படி மனு வழங்கினோம். வாக்கு எண்ணும் மையங்களில் கழிவறை, அவசர ஊர்தி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க : உழைப்பவரின் கனவுகள் நனவாக மே தின வாழ்த்துகள் - டிடிவி தினகரன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.