தமிழ்நாடு முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் (நிலை 1) உதயச்சந்திரனுக்கு, பொதுத்துறை, ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புப்பணி ஆணையம், தகவல் தொழில்நுட்பம், உள்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வை, உயர் கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தொழில் துறை, திட்டமிடுதல் மற்றும் மேம்பாடு, சாதி, மத மேம்பாடு ஆகியத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதன்மைச் செயலாளர் (நிலை 2) உமாநாத்திற்கு எரி சக்தித்துறை, உணவு, சிறப்பு மேம்பாடு, மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை, போக்குவரத்துத்துறை, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை (கட்டடம்), நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், நீர்வள ஆதாரங்கள், நிதித்துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதன்மைச் செயலாளர் (நிலை 4) அனு ஜார்ஜுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் துறை, சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை, கால்நடை, மீன்வளம், மீனவர் நலத்துறை, கைத்தறி, துணிநூல், கிராமத் தொழில்கள், சுற்றுலா மற்றும் கலாசாரம், சமூக சீரமைப்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதலமைச்சருடன் சந்திப்பு, வெளியூர் பயணங்கள், அரசாங்கத்தின் நெறிமுறைகள் ஆகியவற்றை மேற்பார்வை செய்வார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது