ETV Bharat / state

திமுக வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் பேரவையில் முதலமைச்சர் உறுதி! - கருணாநிதியின் கொள்கை வாரிசு

திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் உறுதி
முதலமைச்சர் உறுதி
author img

By

Published : Jun 24, 2021, 3:37 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் 16ஆவது சட்டப்பேரவையின் கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். அப்போது,

'நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா... அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி... கருணாநிதியின் தொடர்ச்சி நான். அண்ணாவின் அரசியல் வாரிசு... கருணாநிதியின் கொள்கை வாரிசு நான்... தமிழ் இனத்தை வாழ வைக்கவும், முன்னேற்றவும் திமுகவால் தான் முடியும் என மக்கள் திமுகவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசின் கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம்தான்; அதாவது ஆளுநர் உரை ட்ரெய்லர்தான். முழு நீள திரைப்படத்தை திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சவால்கள், அதை சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

திமுக அரசின் பயணம், இடர்பாடுகளை எதிர்கொள்ளும் விதம், மற்றும் பிரச்னைகளை சூட்சமத்துடன் கையாண்டு அதற்கு தீர்வு காணப்படும். பொறுத்தார் பூமி ஆள்வார், நாங்கள் 10 ஆண்டு பொருத்து உள்ளோம். சந்தேகம் வேண்டாம் திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.