ETV Bharat / state

தமிழ்நாட்டில் நோட்டாவிற்கு வாக்களித்த 5 லட்சம் ‘அதிமேதாவிகள்’! - vote percentage

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5.41 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை நோட்டாவிற்கு செலுத்தியுள்ளனர்.

nota
author img

By

Published : May 26, 2019, 2:48 PM IST

17ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் திமுகவும் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளை திமுகவும், ஒரு தொகுதியை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் மட்டுமின்றி அமமுக, நாதக, மநீம ஆகிய கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை களமிறக்கினர்.

இவர்கள் இல்லாமல் தொகுதிக்கு சுயேட்சைகள் உள்ளிட்ட 10 வேட்பாளர்களாவது கூடுதலாக களமிறங்கியிருந்தனர். இவர்கள் யாரையும் விரும்பாத பட்சத்தில் ‘நோட்டா’ (None Of The Above - NOTA) என்ற சின்னத்திற்கு வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் உரிமை வழங்கியுள்ளது. ஆனால், நோட்டாவிற்கு வாக்களிப்பது ஏதோ ஃபேஷன் போன்றதொரு மனநிலையை சில சமூகவலைதளவாசிகள் பரப்பியதன் விளைவாக தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், சுயேட்சையாக களம் காண்பவர்கள் என யாரையும் தெரிந்து கொள்ளாமலே சில ‘அதிமேதாவிகள்’ நோட்டாவிற்கு வாக்களித்துவிட்டு, அதனை பெரும் சாதனையாக சிலாகித்துக் கொள்வதையும் பார்க்க முடிகிறது.

இந்த அவல நிலையில் இருந்து இளம் வாக்காளர்களை காக்க வேண்டிய பெரும் கடமை இந்த சமூகத்திற்கு இருப்பதை உணர்ந்த சிலர், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் விளைவாக கடந்த தேர்தலில் பதிவான 1.44% வாக்குகளை விட இம்முறை நோட்டாவிற்கு விழுந்த வாக்குகள் 1.28% ஆக குறைந்துள்ளது. இருப்பினும் இந்த நிலை மாறிட வேண்டும் என்பதே பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின் எண்ணமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் நோட்டாவிற்கு பதிவான வாக்குகள் தொகுதி வாரியாக:

தொகுதிகள் நோட்டா பெற்ற வாக்குகள் சதவீத அடிப்படையில்
அரக்கோணம் 12179 1.03
ஆரணி 16921 1.48
மத்திய சென்னை 13822 1.76
வடசென்னை 15687 1.64
தென்சென்னை 16891 1.5
சிதம்பரம் 15535 1.35
கோவை 23190 1.85
கடலூர் 8725 0.84
தருமபுரி 13379 1.09
திண்டுக்கல் 14177 1.22
ஈரோடு 14795 1.39
கள்ளக்குறிச்சி 11576 0.96
காஞ்சிபுரம் 21661 1.75
கன்னியாகுமாரி 6131 0.58
கரூர் 9603 0.87
கிருஷ்ணகிரி 19825 1.71
மதுரை 16187 1.59
மயிலாடுதுறை 8231 0.75
நாகப்பட்டினம் 9463 0.94
நாமக்கல் 15073 1.33
நீலகிரி 18149 1.8
பெரம்பலூர் 11325 1.03
பொள்ளாச்சி 15110 1.4
ராமநாதபுரம் 7595 0.71
சேலம் 17130 1.36
சிவகங்கை 9283 0.86
ஸ்ரீபெரும்புதூர் 23343 1.66
தென்காசி 14056 1.32
தஞ்சாவூர் 15105 1.43
தேனி 10686 0.91
திருவள்ளூர் 18275 1.3
தூத்துக்குடி 9234 0.93
திருச்சி 14437 1.38
திருநெல்வேலி 10958 1.05
திருப்பூர் 21861 1.95
திருவண்ணாமலை 12317 1.07
விழுப்புரம் 11943 1.05
விருதுநகர் 17292 1.61

தமிழ்நாடு அளவில் மொத்தமாக 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.28 சதவீதம் ஆகும். 100 வாக்காளர்கள் உள்ள ஒரு தொகுதியில் 97 பேர் நோட்டாவிற்கு வாக்களித்துவிட்டு, எஞ்சியுள்ள 3 பேர் ஒரு வேட்பாளருக்கு வாக்களித்தால் அவரே வெற்றி பெறுவார் என்கிற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இத்தனை வாக்காளர்கள் தங்களின் வாக்குகளை செல்லாக் காசுகளாக வீணாக்கியுள்ளனர் என்பதே வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

சென்னை // வி.டி. விஜய் // சிறப்பு செய்தி

நாடாளுமன்ற தேர்தல்முடிவுகள் வெளிவந்து புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது. மத்தியில் பாஜகவும், மாநிலத்தில் திமுகவும் பெரும்பான்மையாக வென்றுள்ளன. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை களமிறக்கியது. இதில் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்றால்  'நோட்டா' என்ற வசதி உள்ளது. None Of The Above (NOTA) என்பதன் சுருக்கமே நோட்டா. கடந்த தேர்தலில் பல கட்சிகள் நோட்டாவுக்கும் கீழான வாக்குகளையே பெற்றிருந்தது. அந்தளவுக்கு நோட்டாவுக்கு வாக்குகளை அள்ளி தெளித்திருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் கணிசமான அளவுக்கு நோட்டாவுக்கான வாக்குகள் குறைந்துள்ளன.  

தமிழக அளவில் பார்த்தோமேயானால் 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 (1.28 %) வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 062 (1.44 % ) வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்துள்ளது.  

தொகுதி வாரியாக நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள்

அரக்கோணம் :   12179        1.03

ஆரணி :      16921            1.48

மத்திய சென்னை:   13822           1.76

வட சென்னை: 15687        1.64

தென்சென்னை : 16891 1.5

சிதம்பரம்      15535 1.35

கோவை  23190 1.85

கடலூர் :   8725 0.84

தர்மபுரி 13379 1.09

திண்டுக்கல்  14177 1.22

ஈரோடு    14795 1.39

கள்ளக்குறிச்சி   11576 0.96

காஞ்சிபுரம்     21661      1.75

கன்னியாகுமாரி   6131 0.58

கரூர்    9603  0.87

கிருஷ்ணகிரி     19825 1.71

மதுரை : 16187 1.59

மயிலாடுதுறை   8231 0.75

நாகப்பட்டினம்   9463           0.94  

நாமக்கல்   15073               1.33

நீலகிரி  18149 1.8

பெரம்பலூர்   11325 1.03

பொள்ளாச்சி  15110 1.4

ராமநாதபுரம்   7595 0.71

சேலம்   17130 1.36

சிவகங்கா 9283           0.86

ஸ்ரீபெரும்புதூர் 23343           1.66

தென்காசி   14056 1.32

தஞ்சாவூர்   15105 1.43

தேனி    10686 0.91

திருவள்ளூர்   18275 1.3

தூத்துக்குடி   9234 0.93

திருச்சி  14437 1.38

திருநெல்வேலி   10958 1.05

திருப்பூர்   21861 1.95

திருவண்ணாமலை   12317 1.07  

விழுப்புரம்   11943 1.05

விருதுநகர் 17292 1.61  

நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுக்கள் கிட்டத்தட்ட செல்லாத ஓட்டுக்களாகவே பார்க்கப்படுகிறது. ஒரு தொகுதியில் நோட்டாவானது எல்லா வேட்பாளர்களை விட அதிக ஓட்டுகள் பெற்றிருக்கும் சூழ்நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக ஓட்டுக்கள் பெற்றிருக்கும் வேட்பாளரே வெற்றிபெற்றவர் ஆகிறார். உதாரணத்துக்கு, 100 ஓட்டுக்கள் கொண்ட தொகுதியில், 97 ஓட்டுக்களை நோட்டாவும், 2 ஓட்டுக்களை ஒரு வேட்பாளரும், 1 ஓட்டினை மற்றொரு வேட்பாளரும் பெற்றிருப்பதாக வைத்துக்கொள்வோம். இதில் அதிகமாக 2 ஓட்டுக்கள் பெற்றுள்ள வேட்பாளரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.