சென்னையில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை அதனை முழுமையாகக் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 மையங்களும், காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினரின் முழு கட்டுப்பாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரிக்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் லிபா நுழைவு வாயில் அருகேயுள்ள மைதானத்திலும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அலுவலர்களின் வாகனங்களை லயோலா கல்லூரி உட்புறமும் நிறுத்த அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை காந்தி சிலை அருகே நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அலுவலர்களின் வாகனங்களை ராணிமேரி கல்லூரி உட்புறம் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் காந்தி மண்டபம் உட்புறம் மற்றும் பிர்லா பிளானட்டோரியம் உட்புறம் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அலுவலர்களின் வாகனங்களை அண்ணா பல்கலைக்கழகம் அருகில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலக உட்புறம் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிறிஸ்துவக் கல்லூரி கிழக்கு தாம்பரத்திற்கு வரும் வேட்பாளர்களின் முதன்மை முகவர்கள் மற்றும் முகவர்களின் வாகனங்கள் அனைத்தும் கிழக்கு தாம்பரம் ரயில்வே மைதானத்திலும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அலுவலர்களின் வாகனங்களை சென்னை கிறிஸ்துவக் கல்லூரி உட்புறமும் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வாக்கு எண்ணிக்கையில் கழகத்தினர் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்'