ETV Bharat / state

லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது - பாமக நிறுவனர் இராமதாசு - தீப ஒளி நாளில் ரூ225 கோடிக்கும் மது விற்பனை

இரண்டு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடியை ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும் என்று பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் இராமதாசு
பாமக நிறுவனர் இராமதாசு
author img

By

Published : Oct 24, 2022, 1:35 PM IST

சென்னை: இதுகுறித்து பாமக நிறுவனர் இராமதாசு தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும்.

லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது. தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஹேப்பி தீபாவளி.. ஸ்டைலான பிளையிங் கிஸ்.. ரசிகர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.