சென்னை: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸிலிருந்து சென்னைக்கு புதிய விமான சேவை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் (AIRFRANCE AIRLINES) தொடங்கியுள்ளது.
வாராந்திர புதிய பயணிகள் விமானம்
பாரீஸில் உள்ள சார்லஸ் டி கோலே விமான நிலையத்திலிருந்து நேற்று (ஜூன் 26) காலை 10.25 மணிக்கு 111 பயணிகள், 19 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட ஏா்பிரான்ஸ் போயிங் ரக விமானம் இன்று (ஜூன் 27) நள்ளிரவு 12.25 மணிக்குச் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
இந்தியா மற்றும் பிரான்ஸ் தேசியக் கொடிகளுடன் வந்து சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை விமான நிலைய அலுவலர்கள் வரவேற்றனர். மேலும் இது சென்னை-பாரீஸ் இடையே இயக்கப்படும் வாராந்திர புதிய பயணிகள் விமானமாகும்.
நாளை புறப்பாடு
இதனைத் தொடர்ந்து விமானிகள், விமானப் பணிப்பெண்கள், விமான பொறியாளர்கள் அனைவருக்கும் மலர் மாலைகள் அணிவித்து, பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்றனர்.
அதன்பின்பு விமான ஊழியர்கள் அனைவரும் ஓய்வுக்காக சென்னை நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றனர். இந்த விமானம் மீண்டும் நாளை (ஜூலை 28) அதிகாலை 1.20 மணிக்குச் சென்னையிலிருந்து பாரீஸ் புறப்பட்டுச் செல்கிறது.
இதையும் படிங்க: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக குணமடைந்த 57,944 பேர்