ETV Bharat / state

இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர் ரெட்டி உயிரிழப்பு! - இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர் ரெட்டி

சென்னை: இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தேசிய தலைவர் சுதாகர் ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

Air passengers Association of India president Dr sudhakar Reddy passed away

author img

By

Published : Jul 14, 2020, 12:20 AM IST

இந்திய விமானப் பயணிகள் சங்கத்தின் (ஏபிஏஐ) தேசிய தலைவர் டி.சுதாகர் ரெட்டி(72) இருதயக் கோளாறு காரணமாக சென்னை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 13) மதியம் மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.இவர் 1990ஆம் ஆண்டு விமான பயணிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக விமான பயணிகள் சங்கத்தினை(ஏபிஏஐ) உருவாக்கி இச்சங்கத்தின் தேசிய தலைவராக இருந்தார்.

நாடு முழுவதும் உள்ள விமான பயணிகளுக்காக பல்வேறு நலன்களை இவர் செய்துள்ளார்.விமான பயணிகளுக்கான உரிமைகளுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளையும் இவர் ஏற்படுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான சேவைகளை அரசு ரத்து செய்தது. அப்போது விமான சேவை நிறுவனங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணிகளுக்கான கட்டண தொகையை திரும்ப தர வேண்டும் என தெரிவித்திருந்தார். தற்போது அவரின் இறப்பு மிகப்பெரிய இழப்பு என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.