ETV Bharat / state

இயந்திரக்கோளாறு;திடீரென ரத்து செய்யப்பட்ட விமானம் - மாற்றுவிமானம்கோரி போராடிய பயணிகள்

சென்னையிலிருந்து நேற்று(அக்12) மும்பை செல்லயிருந்த ஏர் இந்தியா விமானம் திடீர் இயந்திரக் கோளாறால் ரத்து செய்யப்பட்டது.

'ஏா் இந்தியா' விமானத்தில் திடீா் இயந்திரக் கோளாறு ; பயணிகள் விமானத்தில் இருந்தே போராட்டம்

author img

By

Published : Oct 13, 2022, 9:52 AM IST

சென்னை: சென்னையிலிருந்து நேற்று(அக்.12) மும்பை செல்லும் ஏா்இந்தியா பயணிகள் விமானத்தில் திடீா் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டதால், 137 பயணிகள் விமானத்திற்குள் இருந்து போராட்டம் நடத்தியதால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.

சென்னையிலிருந்து மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று(அக்.12) இரவு 9.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் மும்பை செல்வதற்காக 137 பயணிகள் இருந்தனர். அந்தப்பயணிகள் அனைவரும் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டனர்.

இதையடுத்து விமானி விமானத்தை இயக்குவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை சரிபார்க்கும்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு இருப்பதை கண்டறிந்தார். இந்நிலையில், விமானம் வானில் பறந்தால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விமானி இந்த விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, விமானத்தை இயக்க முடியாது என்று சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்துவிட்டார்.

இதையடுத்து, விமானம் ரத்து என்று பயணிகளுக்கு அறிவித்து, பயணிகளை கீழே இறங்கும்படி கூறினார். ஆனால் அதற்கு பயணிகள், “இந்த நேரத்தில் திடீரென விமானம் ரத்து என்று எங்களைக் கீழே இறக்கிவிட்டால் நாங்கள் என்ன செய்வோம். எங்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யுங்கள்.

அதை செய்த பிறகு நாங்கள் இறங்கி அந்த விமானத்தில் ஏறுகிறோம்” என்றுகூறி, விமானத்துக்குள்ளேயே இருந்து போராட்டம் நடத்தினர். இதற்கு இடையே விமான நிலைய அலுவலர்களும், ஏர் இந்தியா அலுவலர்களும் பயணிகளை சமரசம் செய்து கீழே இறக்குவதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அதன் பின்னர், இந்தப் பயணிகளை விமான நிலைய அலுவலர்கள் அதிகாலையில் இரு வேறு விமானங்களில் மாற்றிப் பயணிக்கச்செய்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் இந்தியை திணிப்பதா...? போராட்டத்தை அறிவித்த திமுக இளைஞர் அணி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.