சென்னை: ஏர் இந்தியா விமான நிறுவனம் சமீபத்தில் தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியா டாடா என்று தற்போது இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு சம்பள பிரச்சனை, மருத்துவ வசதி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று (மார்ச் 16) ஒரு புதுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாள் மட்டும் அவர்கள் தங்கள் எந்த டூல்ஸ்சும், அதாவது கருவிகள் எதையும் பயன்படுத்தாமல் பணி செய்வது என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சென்னை விமான நிலையத்திலும் ஏர் இந்தியா நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றும் 23 ஊழியர்கள் சிறிது நேர ஆர்ப்பாட்டத்திற்கு பின் பணிக்கு சென்றனர். ஒருநாள் முழுவதும் எந்தவிதக் கருவிகளையும் பயன்படுத்தாமல் கைகளால் மற்றும் உடல் ரீதியாகவும் பணிகளை மட்டுமே செய்வது என்று புதுமையான முறையில் போராட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறையாக சென்னையில் 'செஸ் ஒலிம்பியாட் 2022' போட்டிகள்