சென்னை தண்டையார்பேட்டையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து களப் பணியாளர்களிடம் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் இன்று (ஆகஸ்ட் 28) ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனா பரிசோதனைகள் அதிகப்படுத்தியுள்ளதால், கடந்த 8 நாள்களில் வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம் சென்னைக்கு வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தலைநகரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் பணியாற்றுவதில் எந்த பிரச்னையும் இல்லை. அதேசமயம் வரவுள்ள தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெறும் வலிமையை உருவாக்கி வைத்துள்ளோம் என்பது எங்களின் எண்ணம். இருப்பினும் எங்களது கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:கூட்டணி குறித்து தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும்: முதலமைச்சர்