சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலை முதல் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த வாக்குப்பதிவானது, மாலை 6 மணிக்குப் பிறகு சிறிது குறையத்தொடங்கியது. வழக்கமாக மாலை 6 மணியுடன் முடிவடையும் வாக்குப்பதிவானது தற்போது கரோனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு மாலை 7 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், உடல்நலக் குறைவால் பாதக்கப்பட்டவர்களும் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் ஆர்கே நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று வெண்டிலேட்டர் உதவியுடன் தனது வாக்கினை செலுத்தினார். சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு மேல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச் சாவடிக்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவர் கரோனா கவச உடைகளை அணிந்தபடியும், வெண்டிலேட்டர் உதவியுடனும் வாக்குச் சாவடிக்குள் அழைத்து வரப்பட்டார். இவருடன் ஆர்கே நகர் அதிமுக வேட்பாளரான ராஜேஷ் உடனிருந்தார்.