ETV Bharat / state

செந்தில் பாலாஜி ஒரு நடிப்பு சக்ரவர்த்தி: அதிமுக எம்.பி தம்பிதுரை விமர்சனம்! - income tax department

அமைச்சர் செந்தில் பாலாஜி ஓர் நடிப்பு சக்ரவர்த்தி என அதிமுக எம்பி தம்பிதுரை விமர்சனம் செய்துள்ளார்.

speaker
கோப்புபடம்
author img

By

Published : Jun 15, 2023, 2:12 PM IST

தம்பிதுரை செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அதிமுக எம்.பி தம்பிதுரை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, "2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிலிருந்து திமுகவிற்குச் சென்று தற்போது அமைச்சராக இருக்கும் நபர்கள் பல ஊழல் முறைகேடுகளைச் செய்துள்ளனர்.இது பற்றிய தகவல்களை ஆளுநரிடம் பலமுறை தெரிவித்து இருக்கிறோம் ஆனால் ஆளுநர் அவர்கள் மீது நடவடிக்கை முயற்சி எடுக்காமலிருந்தார்.

தற்போது அமலாக்கத்துறை மற்றும் வருவாய்த்துறையின் கவனத்தினால் மேலும் மதுபான ஊழல் முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு புகார்கள் எழுந்துள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியில் நீடிப்பாரா என்பதைத் தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் ஊழல் முறைகேடு வழக்குகளில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி தாமாக முன் வந்து பதவி விலக வேண்டும் எனவும் ஒரு அமைச்சர் மீது அளவுக்கு அதிகமான குற்றச்சாட்டுகள் எழும் பட்சத்தில் அவர் அந்த பதவியில் வகிக்க கூடாது என்றார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவன் அப்பொழுதே மத்திய அமைச்சர் என்ற பதவியும் வகித்துள்ளேன். அப்போது தமிழகத்தில் செந்தில் பாலாஜி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டவர்.செந்தில் பாலாஜியைப் பற்றி மக்களுக்குத் தெரியும் அவர் அணில் என்று கேலியாக கூறினார்.

இந்த சிறிய வயதில் அமைச்சர் என்ற பெரிய பொறுப்பில் இருக்கும் செந்தில் பாலாஜி அவப்பெயருடன் செயல்படுவது முறையல்ல என்றும் இது திமுக கட்சிக்கும் மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தித் தரும்.மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படுவதும் டாஸ்மார்க் மதுபான கடைகளில் லஞ்சம் வாங்குவதும் மின்சார கட்டணம் உயர்வதும் கள்ளச்சாராயம் விற்பனையில் பல பேர் இறந்தது இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சர் தற்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நெஞ்சு வலியால் சிகிச்சைக்காகக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது போன்ற நடிப்புகளுக்கெல்லாம் சக்கரவர்த்தியாகத் திகழ்பவரே செந்தில் பாலாஜி என்று மக்கள் அறிவர்.அவரை இன்னொரு நடிப்புலகின் அரசனாக இருக்கும் முதல்வர் பார்த்துள்ளார் என்று தான் கூற வேண்டும்" எனக் கடுமையாக விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க:டைமிங் ரொம்ப முக்கியம்.. பார் ஒப்பனுக்கு காத்திருந்த மது பிரியர்கள்.. புதுக்கோட்டை வைரல் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.