ETV Bharat / state

குட்கா வழக்கு: முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்பட அரசு அலுவர்களிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

interrogation-on-9-government-officials-including-former-minister-vijaya-baskar-on-gutka-case

author img

By

Published : Jul 23, 2022, 5:41 PM IST

சென்னையில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர்கள் உள்பட அரசு உயர் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், எஸ்.பி விமலா மற்றும் கலால் துறை, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இதையடுத்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித் துறை அலுவலர் நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக அறியப்பட்டதை தொடர்ந்து மீண்டும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. அப்போது 246 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. அமலாக்கத் துறையினர் முடக்கினர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 12 அலுவலர்கள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக 12 பேரின் பட்டியலை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ அனுமதி கேட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 23) அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக சிபிஐக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.