ETV Bharat / state

அயனாவரத்தில் கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்: ரூ.30,000 பறிமுதல்!

சென்னை: அயனாவரம் தொகுதியில் அதிமுக பிரமுகர், கையில் ரூ. 30,000 பணத்துடன், கையும் களவுமாக சிக்கிக் கொண்டார்.

பணம் பறிமுதல்
அயனாவரத்தில் கையும் களவுமாக சிக்கிய அதிமுக பிரமுகர்: 30,000 ரூபாய் பறிமுதல்
author img

By

Published : Apr 2, 2021, 5:52 PM IST

சென்னை - வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் திருவள்ளுவர் நகர் பகுதியில், அதிமுக வேட்பாளரான ஜே.சி.பி பிரபாகரனுக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர்கள் பிரசுரம் வழங்கி, பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக திமுகவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் வில்லிவாக்கம் திமுக கிழக்குத் தொகுதி செயலாளர் வாசு மற்றும் கட்சித் தொண்டர்கள் சென்று பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வந்த அதிமுக பிரமுகர் ஒருவரை கையும் களவுமாகப் பிடித்தனர். சிலர் தப்பியோடியுள்ளனர்.

பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் அதிமுக 98ஆவது வட்ட நிர்வாகி பாஸ்கர் ராவ் என்பது தெரியவந்தது. அவரது பையில் இருந்த 30,000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அதிமுக பிரமுகர் பாஸ்கர் தப்பியோடி உள்ளார்.

இது குறித்து அதிமுக பிரமுகர் பாஸ்கர் ராவ் மீது திமுக நிர்வாகிகள், அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: குறுக்கு வழியில் பிரதமரான மோடி என்னை குறை கூறுவதா? - உதயநிதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.