சென்னை: தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது தமிழக அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1000 - அரசாணை வெளியீடு!