சென்னை: தென்னிந்திய திருச்சபையின் பவளவிழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,
உள்ளாட்சித் தேர்தலுக்கானப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாகவும், திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறும் என்றும் கூறினார்.
மேலும், திமுக பிரமுகர்கள் மிரட்டுவதாகக் கூறுகிறவர்கள் அதற்கான ஆதரத்தை அளித்தால், முதலமைச்சர் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும், கடந்த ஆட்சியில் நியாயமான வெற்றியையே போராடி பெற்றதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, 2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வர வேண்டும் என்பது எதிர்க்கட்சித்தலைவரின் ஆசை எனக் குறிப்பிட்ட அவர், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருவதாகவும்,
எதிர்க்கட்சித்தலைவர் கூறுவது போல், 4 மாதத்தில் 4 வாக்குறுதிகளையாவது திமுக நிறைவேற்றியுள்ளது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டு நலனுக்கு அவசியம் - நிதிஷ் குமார்