ETV Bharat / state

சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை உள்ளதா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி - Madras High Court Question

Madras High court: அதிமுகவின் உறுப்பினராக நியமிக்கப்படும் எவரும், கட்சி தலைமையின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர மாட்டோம் என உறுதிமொழி அளித்துள்ள நிலையில், சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர உரிமை உள்ளதா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 8:31 PM IST

சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, கட்சியின் பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன் பின்னர் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும், கடந்த 2017ஆம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தன்னை பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் முன்பு இன்று (நவ.03) விசாரணைக்கு வந்தபோது, அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளர் தரப்பில் ஆஜரான விஜய் நாராயண், பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் சசிகலா நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போது, “2016ஆம் ஆண்டு பொதுக்குழுவை கூட்ட அறிவிப்பு வெளியிட்டது யார்? யாருக்கு அதிகாரம் உள்ளது” என நீதிபதிகள் கேள்வி எழுப்புனர். நீதிபதிகள் கேள்விக்கு பதிலளித்த அதிமுக தரப்பு வழக்கறிஞர், “தலைமை அலுவலகம் தான் அறிவிப்பை வெளியிட்டது. அதிமுகவில் அதிகாரம் கொண்ட யாரும் இல்லாதபோது அறிவிப்பு வெளியிட தலைமைக்கு அதிகாரம் உள்ளது.

கட்சி தலைமை முடிவெடுக்க அதிகாரம் உள்ளது என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பொதுக்குழுவில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு பிறகு கட்சி உரிமையை சசிகலா கோருகிறார். அவரது நீக்கத்திற்கு பிறகு, 3 பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.

சசிகலா பொதுக்குழு தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்டார். அவரை நீக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப மாற்றங்கள் கட்சியில் நிகழ்ந்து வருகிறது. உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தான் முடிவு எடுக்கப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பொதுச்செயலாளர் பதவி நிரப்பப்படவில்லை. அதிமுக தலைமை அலுவலகம் தனது அதிகாரத்தின் படி, புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒரு தலைமை இல்லாத போது முடிவெடுக்க, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அதிகாரம் உள்ளது என்பதை ஏற்று, தினகரன் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை” என தெரிவித்தார்.

இதையடுத்து, “அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக உள்ள எவரும், கட்சியின் எந்த முடிவை எதிர்த்தும் நீதிமன்றத்துக்கு போக உரிமையில்லை என்றும், போக மாட்டோம் என்ற உறுதிமொழி அடிப்படையில் அடிப்படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர்.

அவ்வாறு நீதிமன்றம் சென்றால் அவர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் போது, பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா எப்படி வழக்கு தொடர முடியும்” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்றால், அவர் சட்டரீதியாக நிவாரணம் கோர உரிமை இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினர. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடையாத நிலையில் வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.