ETV Bharat / state

தமிழ்நாடு அரசியலில் 'இது' மட்டும் நடக்கவே நடக்காது - ஜெயக்குமார் திட்டவட்டம்! - Erode East By Election update

அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ‘இது’ மட்டும் நடக்கவே நடக்காது - ஜெயக்குமார்

author img

By

Published : Feb 7, 2023, 1:25 PM IST

Updated : Feb 7, 2023, 2:33 PM IST

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (பிப்.7) தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாகுவை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் இன்பதுரை ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகார் அளித்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் அளித்த முழு பேட்டி

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “திமுக, அரசு இயந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி செய்து, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது.

பணத்தை வாரி வாரி செலவழித்து, ஒட்டுமொத்த அமைச்சர்களும், திமுகவினர்களும் அங்கே முகாமிட்டு செயலாற்றி வந்தாலும், அதிமுக அங்கு அமோக வெற்றி பெறும். அமைச்சர்கள் ஒவ்வொரு‌ பூத்துகளுக்கும் வரும்போது ஆராத்தி, வெற்றிலை, பாக்கு, தேங்காய், சொம்பு அதில் 1,000 ரூபாய் வைத்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.

தேர்தல் வந்தால்தான் மக்கள் கண்ணுக்குத் தெரிவார்கள். இல்லையென்றால் தெரிய மாட்டார்கள். சுவர் விளம்பரங்களிலும் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனர். இவை அனைத்தையும் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என சொல்லி இருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ, அதுதான் ஓபிஎஸ்சை நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளது. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

ஓபிஎஸ் தரப்பினருக்கு தென்னரசு என்ற பெயரையே சொல்ல வலிக்கிறது. இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது என்பது முரண்பாடானது. நட்சத்திர பேச்சாளர்களுடைய பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கான கடிதம் கொடுக்கவில்லை என்பது குறித்து சி.வி.சண்முகம், தமிழ்மகன் உசேன் ஆகியோர் டெல்லியிலேயே கூறிவிட்டனர்.

அது குறித்து நான் பேச விரும்பவில்லை. அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது. ஓபிஎஸ் தொடர்ந்து திமுகவின் பிடிமாகவே செயல்பட்டு வருகிறார். இரட்டை இலை முடக்க முயற்சி மேற்கொண்டு முடியாத நிலையில், இவ்வாறான பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது” என்றார்.

இதையும் படிங்க: 'அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும்' - வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

Last Updated : Feb 7, 2023, 2:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.