சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆட்சி அதிகாரத்தில் கட்சியினரின் தலையீடு இருக்கக்கூடாது என்று வலியுறுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
ஆனால், இன்று எல்லா மட்டத்திலும் திமுகவினரின் தலையீடு தலைவிரித்து ஆடுகிறது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையிலும் திமுகவினரின் தலையீடு சென்றிருக்கிறது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முத்தபுடையான்பட்டியில் மணல் கடத்துவதாக காவல் துறைக்கு தகவல் வந்ததையடுத்து தனிப்படை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும், அப்போது மணல் அள்ளிக்கொண்டிருந்த ஒரு ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்ததாகவும், அவற்றின் ஓட்டுநர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகவும் அந்த வாகனம் மணப்பாறை கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளருடையது எனத் தெரியவந்தது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலின்போது கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளரையும் கொல்ல முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இதில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு காவல் துறையினரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.