சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு அணியைச் சேர்ந்த பாபு முருகவேல் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "விருதுநகர் மாவட்ட காவல் துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 22-க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், ராஜேந்திர பாலாஜியை மட்டும் அவ்வளவு விரைவாக காவல் துறை கைதுசெய்தது ஏன் எனத் தெரியவில்லை.
சென்னை தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த வழக்கில் காவல் துறை அலுவலர்கள் மீது வழக்கு நிலுவையில் இருந்தபோதிலும் கைது நடவடிக்கையில் ஈடுபடவில்லை.
தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது காவல் துறை அளவு கடந்த வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. அதைக் கைவிட வேண்டும் இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்.
ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞர்களின் வீடுகளில் காவல் துறை சோதனை நடத்தியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு