தமிழ்நாட்டில் தற்போது காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, விக்கிரவாண்டி தொகுதியில் காணை ஒன்றிய அதிமுக செயலாளராக இருக்கும் எம்.ஆர். முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராக இருக்கும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டியில் புகழேந்தி போட்டி: திமுக தலைமை அறிவிப்பு!