சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட 117ஆவது வார்டில் அதிமுக சார்பாக போட்டியிடுபவர், ஆறுமுகம் (எ) சின்னையன்.
சென்னை தியாகராய நகர் பார்த்தசாரதிபுரம், தெற்கு போக் சாலையில் வாக்கு சேகரித்த இவர், பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் சென்று அங்கிருந்த பாஜக நிர்வாகிகளிடம் தனக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
பாஜக தலைமை அலுவலகத்தில் நள்ளிரவில் (பிப்.10) பெட்ரோல் குண்டு வீசியதால், காலை முதல் பரபரப்பாக இருந்தது.
இந்நிலையில் பாஜக அலுவலகத்தில் மேள தாளத்தோடு சென்று அதிமுக வேட்பாளர், தனக்கு வாக்களிக்க வேண்டும் என வந்து வாக்கு சேகரித்த நிகழ்வு அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: கோவையில் ஆர்மோனிய பெட்டி வாசித்து வாக்கு சேகரித்த வேட்பாளர்!