ETV Bharat / state

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - அதிமுக நிர்வாகி ஜெயகோபால் பிணை மனு ஒத்திவைப்பு - AIADMK administrator Jayagopal's bail postponed

சென்னை:பேனர் விழுந்து இளம்பெண் சுபஶ்ரீ பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் பிணை மனு மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Oct 10, 2019, 1:33 PM IST

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த 27ஆம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாள்களாக சிறையில் இருக்கும் இவர்கள் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக நிர்வாகி ஜெயகோபால்
அதிமுக நிர்வாகி ஜெயகோபால்
அந்த மனுவில், 'எனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைக்கப்பட்டது. வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை.

மேலும் கட்சியினர் பேனர் வைத்ததற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனத் தெரிவித்துள்ள மனுதாரர்கள், முறையான விசாரணை நடத்தாமல் காவல் துறையினர் இயந்திரத்தனமான வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் பெரும்பான்மையான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Intro:Body:பேனர் விழுந்து இளம்பெண் சுபஶ்ரீ பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்சியினர் பேனர் வைத்ததற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள மனுதாரர்கள், முறையான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் இயந்திரத்தனமான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,
பெரும்பான்மையான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.