ETV Bharat / state

’ரமலானை முன்னிட்டு ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டும்’ - எஸ்டிபிஐ கோரிக்கை - ரமலான்

மத வழிபாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்குமாறும், அது இஸ்லாமியர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் எஸ்டிபிஐ கட்சியினர் கோரியுள்ளனர்.

ரமலான்
ரமலான்
author img

By

Published : Apr 9, 2021, 10:55 AM IST

கரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் வேகமெடுத்துள்ள நிலையில், ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு வெளியிட்டுள்ள பகுதிநேர ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளில் சில தளர்வுகள் வேண்டி எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.கே.கரீம், ராஜா முகமது ஆகியோருடன் வந்து தமிழ்நாடு தலைமைச் செயலர் ராஜூவ் ரஞ்சனிடம் முன்னதாக கோரிக்கை மனு அளித்தார். அம்மனுவில், ”கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் தொடர்பாக ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள சில வழிமுறைகளுடன் கூடிய பகுதிநேர ஊரடங்கு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மதவழிபாடு தொடர்பான நிகழ்வுகளுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்குகிறது. இம்மாதத்தில் அதிகமான அளவு இரவு நேர வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் ஈடுபடுவார்கள். கடந்த ஆண்டு கோவிட் பரவல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் இஸ்லாமியர்கள், ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர்.

ஆகவே, இதனைக் கருத்தில்கொண்டு குறைந்தபட்சம் இரவு 8 மணி முதலான ஊரடங்கு அறிவிப்பை இரவு 10 மணிக்கு என மாற்றினால் அது இஸ்லாமியர்களின் ரமலான் மாத வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதால், இரவுநேர ஊரடங்கை இரவு 8 மணியிலிருந்து, இரவு 10 மணிக்கு மாற்றி அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவிடம் மீண்டும் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.